இந்தியாவில் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது தினசரி கொரானா தொற்று
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.
நேற்று முன்தினத்தை விட நேற்று தொற்று எண்ணிக்கை சற்று குறைந்திருந்த நிலையில், இன்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்து 84ஆயிரத்து 372 பேருக்கு கொரோனா உறுதியானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் ஆயிரத்து 27 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 82 ஆயிரத்து 339 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை பதிமூன்றரை லட்சத்தை கடந்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மொத்தம் 11 கோடியே 11லட்சத்து 79ஆயிரத்து 578 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments