நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 311 பிஎஸ்எஃப் வீரர்களுக்கு கொரோனா தொற்று

0 2054

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 311 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஆயிரத்து 362 வீரர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை குறைந்தது 16 ஆயிரத்து 150 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 14 ஆயிரத்து 739 வீரர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சி.ஆர்.பி.எஃப், சி.ஐ.எஸ்.எஃப், எஸ்.எஸ்.பி, ஐ.டி.பி.பி, என்.டி.ஆர்.எஃப் மற்றும் என்.எஸ்.ஜி போன்ற பிற துணை ராணுவப் படைகள் வீரர்களை விட பிஎஸ்எஃப் வீரர்கள் அதிகம் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments