இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கேள்விக்கு விளக்கம் அளித்த அவர், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று காலை 11 மணி நிலவரப்படி ஒரு கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
இந்த மாத இறுதி வரை மேலும் 2 கோடியே 1 லட்சத்து 22 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகளை மாநில அரசுகளுக்கு வழங்க இருப்பதாக தெரிவித்தார். எனவே திட்டமிட்டு செயல்படுவதில் தான் சிக்கல் இருக்கிறதே தவிர, கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை என்று ராஜேஷ் பூசன் கூறினார். கேரளா மாநிலம் தான் 100 சதவீதம் தடுப்பூசியை வீணாக்காத மாநிலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Comments