அவ்வளவும் அன்பு.... இறந்த மனைவியிடமே சென்ற கணவர்!

0 14316

ராணிப்பேட்டை அருகே கடந்த 30 வருடங்களாக சுக , துக்கங்களை சேர்ந்தே அனுபவித்து வந்த தனது மனைவி உயிரிழந்த செய்தியறிந்து கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள மேல் புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் - உமா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகனும் , மகளும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இளைய மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

உமாவிற்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் உமா காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் செல்வம், துக்கம் தாளமுடியாமல் விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து, தகவலறிந்து வந்த கலவை காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்கரசி, சம்பவ இடத்திற்கு சென்று இருவரது உடல்களையும் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தார்.

மேலும் இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்கமுடியாமல், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments