சென்னையில் ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்ற விவகாரம்..! சர்ச்சைக்குரிய பெயர் கருப்புமை பூசி அழிப்பு: போலீசார் விசாரணை
சென்னையில் ஈ.வெ.ரா பெரியார் சாலையின் பெயர் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அந்த பெயர் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டது.
1979ஆம் ஆண்டு தந்தை பெரியாரின் நூற்றாண்டை ஒட்டி, அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர், பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு, ஈ.வெ.ரா பெரியார் சாலை என பெயர்சூட்டினார்.
இந்நிலையில், சென்ட்ரல் பகுதியில், சாலையின் இருபுறமும், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த பெயரான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங் ரோடு என பெயர் மாற்றப்பட்டது.
இதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இந்நிலையில், அந்த பெயர் பலகையில் இருந்த கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு என்ற பெயர் கருப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.
Comments