இளவரசர் பிலிப்பின் சவப்பெட்டியை லேண்ட்ரோவர் வாகனத்தில் கொண்டு செல்ல ஏற்பாடு

0 3144

ங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப்  வடிவமைத்த லேண்ட் ரோவர் வைத்து அவரது இறுதி ஊர்வலம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டு உள்ளது.

99 வயதான எடின்பரோ கோமகன் பிலிப், கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச்சடங்கு வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது.  கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன் இளவரசர் பிலிப் வடிவமைக்க உதவிய லேண்ட் ரோவர் வாகனத்தில் வைத்தே அவரது சவப்பெட்டி 8 நிமிடம் பயணித்து இறுதிச் சடங்கு நடைபெறும் வின்சர் கோட்டையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments