ரஷ்யாவின் ஸ்புட்னிக் வீ தடுப்பூசியை அதிக விலை கொடுத்து இந்தியா வாங்குமா?
ஸ்புட்னிக் வீ தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், அதனை அதிக விலை கொடுத்து இந்தியா கொள்முதல் செய்யுமா? என ஐயம் எழுந்துள்ளது.
ஸ்புட்னிக் வீ தடுப்பூசிக்கு, இந்திய மதிப்பில், 750 ரூபாய் என்ற அளவில், ரஷ்ய தயாரிப்பு நிறுவனம் விலை நிர்ணயம் செய்து விற்கிறது. ஆனால், இங்கிலாந்தின் ஆஸ்ட்ராஜெனகா-ஆக்ஸ்போர்டு சார்பில், புனேவின் சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை, சுமார் 150 ரூபாய் என்ற அளவிலேயே, இந்தியா கொள்முதல் செய்கிறது.
இதனால், ரஷ்ய தடுப்பூசியை 750 ரூபாய்க்கு அதிக விலை கொடுத்து, இந்திய அரசு வாங்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து, மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments