நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சுஷில் சந்திரா

0 2694

நாட்டின் 24வது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட சுஷில் சந்திரா பொறுப்பேற்றுக் கொண்டார்.  வருமான வரித்துறையில் 39 ஆண்டுகள் பணியாற்றிய அவர், 2019 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோரா நேற்று ஓய்வு பெற்றதை அடுத்து அந்த பதவியில் சுஷில் சந்திரா நியமிக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வரை சுஷில் சந்திரா தலைமை தேர்தல் ஆணையர் பதவியில் இருப்பார். இந்த கால கட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் , மணிப்பூர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களை, தேர்தல் ஆணையம் நடத்த இருக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments