சென்னையில் மயங்கிய நேரத்தில் ரூ.40லட்சம் திருடப்பட்டதாக போலீசில் புகார்

0 3395
சென்னையில் மயங்கிய நேரத்தில் ரூ.40லட்சம் திருடப்பட்டதாக போலீசில் புகார்

சென்னை தியாகராய நகரில் மயங்கிய நேரத்தில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் காணாமல் போனதாக பைனான்ஸ் நிறுவன மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அண்ணாநகரில் உள்ள கேபிட்டல் இந்தியா பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவரும் சரவணன், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரியாலுடன் தியாகராய நகரிலுள்ள Money exchange அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது சவுத் போக் சாலையில் திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாகவும், அருகிலிருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவிக்கும் சரவணன், கண்விழித்து பார்த்தபோது, தான் வைத்திருந்த பண பை காணாமல் போனதாக மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments