பிரபல நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த நடிகர் செந்தில், நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், கொரோனா அறிகுறிகள் இருந்ததின் பேரில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து, அவரது மனைவி, மகன், மருகமள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Comments