புகுஷிமா அணு நிலைய சுத்திகரிப்பு நீரை கடலில் விட ஜப்பான் முடிவு: சீனாவும், உள்ளூர் மீனவர்களும் கடும் எதிர்ப்பு

0 2753

மூடிக்கிடக்கும் புகுஷிமா அணு மின் நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விட உள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளதற்கு சீனாவும், உள்ளூர் மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

2011 சுனாமியால் பாதிப்புக்குள்ளான பிறகு மூடப்பட்ட இந்த அணுமின் நிலையத்தில் 10 லட்சம் டன்களுக்கும் அதிகமான அணு கதிர் வீச்சுள்ள நீர் தேங்கி உள்ளது. இதை சுத்திகரித்து கடலில் விட உள்ளதாகவும் ஆனால் அதற்கு பல வருடங்கள் பிடிக்கும் எனவும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு சர்வதேசஅணுசக்தி முகமை ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால் இது பொறுப்பற்ற செயல் என சீனாவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டு தற்போது சீரடைந்து வரும் தங்களது வாழ்வாரம் இனி  பாதிக்கப்படும் என ஜப்பான் மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் வெளியிடப்படும் நீரின் தரம் நன்கு பரிசோதிக்கப்பட்ட பிறகே அது கடலில் விடப்படும் என ஜப்பான் பிரதமர் உறுதி அளித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments