24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தடைவிதித்த தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து மமதா பானர்ஜி இன்று தர்ணா போராட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் 4ம் கட்டவாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடிகளைக் கைப்பற்ற முயன்ற திரிணாமூல் தொண்டர்களை நோக்கி மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து 3 நாட்களுக்கு எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரும் அப்பகுதிக்குள் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. தடையை மீறி அப்பகுதிக்கு தமது தொண்டர்களை சந்திக்க உள்ளதாக மமதா பானர்ஜி அறிவித்திருந்தார் .
இதனிடையே மதரீதியான பிரச்சாரம் மேற்கொண்டதாக மமதா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 24 மணி நேரம் பிரச்சாரம் செய்யத் தடைவிதித்துள்ளது. இதனைக் கண்டித்து இன்று பகல் 12 மணியளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.
Comments