கோவையில் உணவகத்தில் சாப்பிட்டவர்களை தடியால் அடித்து விரட்டிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்
கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஓட்டலில் புகுந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை தடியால் அடித்து விரட்டிய காவல்துறை உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி இரவு பத்தரை மணியளவில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை விரட்டிய முத்து அவர்களை அடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து சாத்தான்குளம் சம்பவத்தை நினைவுபடுத்துவதாக பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன
இதனையடுத்து உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டிருந்தார். தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Comments