உத்தரப்பிரதேசத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளால் குழப்பம்!
உத்தரப்பிரதேச மாநிலம் முழு அடைப்பை அறிவிக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களால் குழப்பம் நீடிக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் 13 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.வாரணாசி, கான்புர், லக்னோ உள்ளிட்ட பெரிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அதிகாரிகள் முழு அடைப்பை அமல்படுத்த ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. முழு அடைப்பு வந்துவிடும் என்ற அச்சத்தால் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி, ஹரியானா போன்ற பகுதிகளில் இருந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் நிலையங்களில் திரண்டுள்ளனர்.
Comments