மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

0 2377
மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல்

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக  அரசியல் செயற்பாட்டாளர் தெஹ்சின் பூனாவாலா என்பவர் தாக்கல் செய்த மனுவில்,  கொரோனா இரண்டாவது அலை வீசுவதால் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

குறிப்பாக, சுவாசக் கோளாறு உள்ளவர்கள், நாள்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்ட இளம் வயதினர், கொரோனா தொற்றால் எளிதில் தாக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் தடுப்பூசி அளிப்பது இன்றைய காலகட்டத்தின் அவசியம் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments