அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட வேண்டாம்: தமிழக அரசின் மருந்துவ நிபுணர் குழு எச்சரிக்கை

0 122485

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால், அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு எந்த நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட வேண்டாம் என்று தமிழக அரசின் மருந்துவ நிபுணர் குழு கூறியுள்ளது.

அந்த குழுவில் உள்ள பிரதிப் கவுர் விடுத்துள்ள இணைய பதிவில், சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 2100ஐ தாண்டியுள்ளதையும், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் இந்த உச்சத்தை எட்டியிருந்ததையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

இதே வேகத்தில் சென்றால் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உயிரிழப்பு அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். எனவே வீடு, அலுவலகத்தில் குழுவாக எந்த செயலிலும் பங்கேற்க வேண்டாம் என்று பிரதிப் கவுர் அறிவுறுத்தி இருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments