வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வேலி அமைக்கச் சென்ற அதிகாரிகள்: மரத்தில் கட்டி வைத்து அடித்த பழங்குடி மக்கள்
தெலுங்கானாவில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வேலி அமைக்கச் சென்ற வனத்துறை அதிகாரியை அப்பகுதி பழங்குடி மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன. பத்ராத்திரி கொத்தகூடம் மாவட்டத்தில் சிந்தகுப்பா என்ற கிராமம் உள்ளது.
பழங்குடி மக்கள் வசிக்கும் அப்பகுதியில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் வேலி அமைப்பதற்காக அதிகாரிகள் சிலர் சென்றுள்ளனர். ஆனால் காலம்காலமாக விவசாயம் செய்து வரும் இடத்தில் வேலி அமைக்கக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள், ஒரு கட்டத்தில் வனத்துறை அதிகாரிகளை தாக்கத் தொடங்கினர். அதிகாரிகளில் ஒருவரை மரத்தில் கட்டி வைத்தும் அவர்கள் தாக்கிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தக் காட்சிகளை அடிப்படையாக வைத்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments