மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை

0 3581
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய 24 மணி நேரத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிறுபான்மையினரின் வாக்குகளை பெற, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பேசிய குற்றச்சாட்டில் மம்தா விளக்கம் அளிக்க கோரி தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. அவர் அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அனைத்து விதத்திலும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் செவ்வாய்கிழமை இரவு 8 மணி வரை மம்தா பானர்ஜி பிரசாரம் செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இது ஜனநாயகத்தின் கருப்பு நாள் என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments