கோவை உணவக தாக்குதல் விவகாரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
கோவையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக, உணவகத்தில் புகுந்து உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை காந்திபுரத்திலுள்ள உணவகத்துக்கு பத்தரை மணியளவில் வந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கொரோனா விதிகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கும் லத்தியடி விழுந்தது.
உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், செய்திகள் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், 2 வாரங்களில் அறிக்கை அளிக்க கோவை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.
Comments