எல்லைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா
நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டுமென நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அறிவுறுத்தியுள்ளார்.
வெல்லிங்டனில் (WELLINGTON)செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 7 நாட்களில் நாட்டின் எல்லைகளில் பணிபுரியும் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
எல்லைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த மாத இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் பணியிடத்திலிருந்து வெளியேற வேண்டும் என பிரதமர் ஜெசிந்தா உத்தரவிட்டுள்ளார். நியூசிலாந்தில், இதுவரை 90 ஆயிரம் பேருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Comments