புதிதாக துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க வழிகாட்டுதல் குழு அமைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் 3 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், புதிதாக துணைவேந்தர் தேர்வு செய்யப்படும் வரை அண்ணா பல்கலைக்கழகத்தை வழிகாட்டுதல் குழு நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் விவேகானந்தன் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் ஒருவரும் இடம்பெற்றுள்ளனர்.
Comments