தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..! மீண்டும் முழு வீச்சில் செயல்பட தொடங்கியது கொரோனா அவசர கால கட்டுப்பாட்டு மையம்
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்ட 24 மணி நேர அவசர கால கட்டுப்பாட்டு அறை மீண்டும் முழுவீச்சில் செயல்பட துவங்கியுள்ளது.
கொரோனா குறித்த சந்தேகங்களை மக்கள் கேட்டு தெரிந்துக் கொள்ள, அவசரகால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டது. அங்கு, பரிசோதனை, பாதிப்பு, உயிரிழப்பு விபரங்கள், படுக்கை வசதிகள், தனிமைபடுத்தலில் இருப்பவர்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இடையில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், செயல்படாமல் இருந்த கட்டுப்பாட்டு மையம், மீண்டும் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று, தடுப்பூசி பெறும் வசதி குறித்த சந்தேகத்தை தெளிவுபடுத்தி கொள்ள தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
Comments