12 பயணிகளுடன் பயணித்த ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராத தொகையை செலுத்தாததால் ஷேர் ஆட்டோ பறிமுதல்

0 10129
12 பயணிகளுடன் பயணித்த ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் அபராத தொகையை செலுத்தாததால் ஷேர் ஆட்டோ பறிமுதல்

சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டியில், 12 பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அவர் அதனை செலுத்தாததால், ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றனவா? என, மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அஸ்தம்பட்டியில், புஷ்பராஜ் என்பவர் 12 பயணிகளை ஆட்டோவில் ஏற்றி சென்றதை கண்ட அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அபராதத்தை செலுத்த தவறியதால், ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments