கோவையில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறியதாக உணவகத்தில் புகுந்து உதவி ஆய்வாளர் தாக்குதல்
கோவை காந்திபுரத்தில் கொரோனா விதிகளை காரணம் காட்டி, உணவகத்தில் புகுந்து காவல் உதவி ஆய்வாளர் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கொரோனா காரணமாக, உணவகங்கள், தேநீர் கடைகள் 50% இருக்கைகளுடன் 11 மணி வரை செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் முன் இயங்கி வரும் உணவகத்துக்கு பத்தரை மணியளவில் வந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கொரோனா விதிகளை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினார்.
இதில், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கும் லத்தியடி விழுந்தது. இந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து உதவி ஆய்வாளர் முத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Comments