கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் சரிவு....!
கொரோனா 2 ஆம் கட்ட அலையின் தாக்கம் பங்கு சந்தைகளில் எதிரொலித்துள்ளது.
வார வர்த்தக துவக்க நாளான இன்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1,126 புள்ளிகள் சரிந்து 48 ஆயிரத்து 465 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது.
ஒரு கட்டத்தில் 1400 புள்ளிகளுக்கும் அதிகமாக வர்த்தகம் வீழ்ச்சி அடைந்தது. அதே போன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி 335 புள்ளிகள் குறைந்து 14 ஆயிரத்து 449 புள்ளிகளில் வர்த்தகமானது.
பெரும்பாலும் வங்கிகளின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பதும், குறிப்பாக வர்த்தக தலைநகர் என கூறப்படும் மும்பையில் அதன் பரவல் அதிகமாக இருப்பதும் பங்குவர்த்தகம் வீழ்ச்சி அடைய முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
Comments