கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அறிவிப்பு
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாகப் பதிவு செய்துள்ள தவில், நாதஸ்வரம் மற்றும் தெருக்கூத்துக் கலைஞர்கள் உள்ளிட்ட ஆறாயிரத்து 810 பேருக்கு ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் சிறப்பு நிவாரண நிதியுதவி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அரசின் சிறப்பு நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது.
நலவாரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் நிவாரண நிதி வழங்கக் கோரிய வழக்கில், அவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த பின்னர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நலவாரியத்தில் புதிதாகப் பதிவு செய்த நாட்டுப் புறக் கலைஞர்கள் ஆறாயிரத்து 810 பேருக்கு ஆளுக்கு இரண்டாயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு கோடியே 36 லட்சத்து இருபதாயிரம் ரூபாய் வழங்கக் கலைப்பண்பாட்டுத் துறை இயக்குநருக்கு நிர்வாக ஆணை வழங்கப்பட்டுள்ளது.
Comments