ஆஸ்திரேலியாவை தாக்கிய சக்தி வாய்ந்த செரோஜா புயலால் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம்
மேற்கு ஆஸ்திரேலியாவை தாக்கிய செரோஜா எனும் சக்தி வாய்ந்த புயலால், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.
செரோஜா புயல் கரையைக் கடந்த போது, கல்பாரி (Kalbarri) ஜெரால்டன் (Geraldton) உள்ளிட்ட கடற்கரையோர ஊர்களில் மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கனமழைக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதித்த பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, மேற்கு ஆஸ்திரேலியாவில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
Comments