அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவு...

0 3271
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

கடந்த  2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்ட இவர் சுமார் 3 ஆண்டுகள் இப்பதவியை வகித்துள்ளார். அவருடைய  பதவி நீட்டிப்பு கோரிக்கை ஏற்கப்படாததை அடுத்து அவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில், அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் அடுத்த சில நாட்களில்  உயர்கல்வித்துறை செயலர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இந்த ஒருங்கிணைப்புக்குழுதான் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கவனிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments