மேற்குவங்கம் கூச்பிகார் வாக்குச்சாவடியில் மக்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது: தேர்தல் ஆணையம் விளக்கம்
தங்களையும், வாக்களிக்க வந்த மக்களையும் காப்பாற்றுவதற்காகவே மத்திய பாதுகாப்பு படையினர் கூச்பிகாரில் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
மேற்குவங்கத்தில் நேற்று நடந்த 4 ஆம் கட்ட வாக்குப்பதிவின் போது சித்தால்குச்சி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், விஷமிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பறித்து அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்த விஷமிகள் முயன்றதால், வேறு வழியின்றி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையை கூச்பிகார் மாவட்டத்திற்குள் அடுத்த 72 மணி நேரத்திற்கு எந்த அரசியல் கட்சி தலைவரும் நுழையக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
Comments