தினசரி 100 கொரோனா பாதிப்புகள் வந்தால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; 30-ந் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் -உத்தரபிரதேச அரசு அறிவிப்பு

0 1754
தினசரி 100 கொரோனா பாதிப்புகள் வந்தால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; 30-ந் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் -உத்தரபிரதேச அரசு அறிவிப்பு

த்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதிவரை அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தினந்தோறும் 1 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, தினசரி கொரோனா பாதிப்பு 100 என்ற எண்ணிக்கையில் பதிவானாலோ அல்லது 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தாலோ அந்த மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தலைநகர் லக்னோ, கான்பூர், வாரணாசியில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments