தினசரி 100 கொரோனா பாதிப்புகள் வந்தால் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும்; 30-ந் தேதி வரை பள்ளிகள் மூடப்படும் -உத்தரபிரதேச அரசு அறிவிப்பு
உத்தரபிரதேசத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்றும், ஏப்ரல் 30-ம் தேதிவரை அனைத்து பள்ளிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தினந்தோறும் 1 லட்சம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக, தினசரி கொரோனா பாதிப்பு 100 என்ற எண்ணிக்கையில் பதிவானாலோ அல்லது 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தாலோ அந்த மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தலைநகர் லக்னோ, கான்பூர், வாரணாசியில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments