கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பு குறைவு: கூடுதலாக 30 லட்சம் தடுப்பு மருந்துகளை அனுப்பிவைக்குமாறு மத்திய அரசுக்கு தெலங்கானா அரசு கடிதம்
மூன்று நாட்களுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனுக்கு தெலங்கானா தலைமை செயலாளர் சோமேஷ் குமார் சனிக்கிழமையன்று கடிதம் எழுதியுள்ளார்.
தற்சமயம் 5 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பு மருந்துகளே கையிருப்பு உள்ளதாகவும், அது 3 தினங்களுக்கே போதுமானது என்பதால், மேலும், 15 நாட்களுக்கு தேவையான 30 லட்சம் தடுப்பு மருந்துகளை அனுப்பிவைக்குமாறு அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே மாபெரும் தடுப்பூசி திருவிழா நடைபெறுவதால் 25 லட்சம் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
Comments