பரப்பன அக்ரஹாரா சிறைக்கைதிக்குப் கேரளாவிலிருந்து பார்சலில் வந்த போதைப்பொருள் குறித்து போலீசார் விசாரணை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள கைதி ஒருவருக்கு கேரளாவிலிருந்து பார்சலில் வந்த போதைப்பொருள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு தின்பண்டங்கள், உடைகளை உறவினர்கள் அனுப்பி வைப்பது வழக்கம். அந்த வகையில் 2008ஆம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முஜீப் என்பவருக்கு கேரளாவைச் சேர்ந்த ஜினெப் என்பவர் அனுப்பிய பார்சலை சிறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர்.
அதில் போதைப் பொருட்கள் இருந்ததால் ஜினெப்பை கைது செய்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர்.
Comments