சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 1,106ஆக உயர்வு
சென்னையிலுள்ள 15 மண்டலங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தெருக்கள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று 931ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை இன்று ஆயிரத்து 106ஆக அதிகரித்துள்ளது. தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன.
Comments