மீண்டும் முழு ஊரடங்கு அச்சம்: குஜராத்திலிருந்து மூட்டை முடிச்சுகளுடன் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்லும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்
குஜராத்தில் கடந்த ஆண்டைப் போல் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்கிற அச்சத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் தனியார் பேருந்துகளில் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
சூரத்தில் பணியாற்றும் பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளர்கள் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்திச் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டில் ஊரடங்கின்போது கடும் துன்பங்களை அனுபவித்ததாகவும், அதைத் தவிர்க்க இப்போது முன்கூட்டியே புறப்பட்டுச் செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Comments