"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
மகாராஷட்ரா உள்பட பத்து மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடா ? மத்திய அரசு விளக்கம்
மகாராஷ்ட்ரா, ஒடிசா உள்பட பத்து மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு நிலவுதாக தெரிவித்த கருத்துக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
போதுமான அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு இல்லாததால் நாளை வரை தடுப்பூசி செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஊசி போட வந்தவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மத்திய அரசு மாநில அரசுகளின் தேவைக்கேற்ப தடுப்பூசிகளை வழங்கி வருவதால் அத்தகைய அறிவிப்பு பலகைகளை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல் தடுப்பூசி முகாம்கள் நடப்பதையொட்டி கூடுதலாக தடுப்பூசிகளை அனுப்பி வைக்கும்படி தெலுங்கானா, ஆந்திரா ,பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரியுள்ளன.
Comments