ஐ.பி.எல்: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

0 3904
ஐ.பி.எல்: சென்னை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி அணி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக நட்சத்திர நாயகன் சுரேஷ் ரெய்னா 4 சிக்சர் விளாசி 54 ரன்கள் குவித்தார். தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளம் போட்டுக் கொடுத்தனர்.

சென்னை வீரர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசிய டெல்லி வீரர்கள் 18 புள்ளி 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 190 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments