”விதிமீறி கூடுதல் பயணிகளை ஏற்றினால் பேருந்து காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்படும்” -கோவை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
கோவையில் விதிகளை மீறி கூடுதல் பயணிகளை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட பேருந்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படும் என கோவை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
கோவை மத்திய பேருந்து நிலையத்தில், கொரோனா விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.
கூடுதல் பயணிகளை அனுமதித்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments