உர விலை உயர்வுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

0 4110

உரவிலை உயர்வுக்கும், சென்னை அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்ததற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் வயிற்றில் வெந்நீர் ஊற்றும் வகையில் 50 கிலோ டி.ஏ.பி. உர மூட்டையின் விலையை 1200 ரூபாயிலிருந்து 1900 ரூபாயாகச் செங்குத்தாக உயர்த்தியிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்த அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் கலைத்தது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments