வளிமண்டல சுழற்சி காரணமாக 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

0 2247

வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக, தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வருகிற 14-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஓரிரு இடங்களில் மிதமான மழையும் 5 நாட்களுக்கு பெய்யக்கூடும்.

எஞ்சிய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments