இந்தியா-சீனா ராணுவ உயரதிகாரிகளிடையே 13 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
இந்திய சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான பேச்சில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து படைகளை மேலும் விலக்கிக் கொள்வது பற்றி விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாங்காங் ஏரிப் பகுதியில் இருந்து சீனப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், இந்திய சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 11ஆவது சுற்றுப் பேச்சு நேற்று நடைபெற்றது. 13 மணி நேரம் நடைபெற்ற பேச்சு இரவு பதினொன்றரை மணிக்கு நிறைவடைந்தது.
இரு படையினரும் நெருக்கமாக உள்ள கோக்ரா குன்றுகள், ஹாட் ஸ்பிரிங்க்ஸ், தேப்சாங் சமவெளி ஆகிய பகுதிகளில் இருந்து சீனா படையினரை விலக்கிக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Comments