விபத்தில் மாற்றுத்திறனாளிகளான மனைவி, மகன்,மகள்... அன்புடன் பராமரித்தவர் இறந்ததால் குடும்பமே தற்கொலை!

0 8328
ராகவ்ன்,செல்வி , மகள் மற்றும் மகன்

விபத்துக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளான மனைவி, மகன்,மகளை அன்புடன் பராமரித்தவர் மரணமடைந்து விட்டதால், குடும்பமே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்து.

திருப்பூர் முதலிபாளையம் மீனாட்சி நகரைச் சேர்ந்தவர் ராகவன் (50), இவரது மனைவி செல்வி (47), இந்தத் தம்பதிக்கு அஸ்வின் (19) என்கிற மகனும்,அகல்யா (17) என்கிற மகளும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, மகன், மகளுடன் ராகவன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் செல்வி ஒரு கையை இழந்தார். அஸ்வின் , அகல்யா ஆகியோரும் மாற்றுத்திறனாளிகளாக ஆகி விட்டனர். ராகவன் மட்டும் சிறிய காயங்களுடன் தப்பித்து விட்டார். மாற்றுத்திறனாளிகளாக மாறிய மனைவி , மகன், மகளை ராகவன் அன்புடனும் சிரத்தையுடனும் பராமரித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் செல்வியின் கணவர் ராகவன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்து போனார். கணவர் இறப்புக்கு பின் செல்வியும் அவரின் மகன் , மகள் இருவரும் கடும் வேதனையில் இருந்துள்ளனர். தங்களை பராமரித்து கொள்ள முடியாமலும் கஷ்டப்பட்டு வந்தனர். அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர். இந்த நிலையில், உதகையில் வசித்து வந்த தன் சகோதரி மகாலட்சுமிக்கு போன், செய்து தாங்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.இதனால், பதறிப் போன மகாலட்சுமி அருகில் இருந்த வீட்டுக்காரரை அழைத்து விவரத்தை கூறியுள்ளார். பக்கத்து வீட்டார் பல முறை செல்வியின் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. தொடர்ந்து, ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது, செல்வி, அஸ்வின், அகல்யா ஆகிய 3 பேரும் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து, அவர்களது சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். 

கணவர் இறப்பால் குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் முதலிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments