மனிதர்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தை தேர்வு செய்ய சுதந்திரம் இருக்கிறது: உச்சநீதிமன்றம்
மனிதர்கள் தங்களுக்குப் பிடித்த மதத்தை தேர்வு செய்ய சுதந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத மாற்றத்தைத் தடை செய்யக் கோரும் பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர். குறுக்கு வழியில் பல்வேறு மதமாற்றங்கள் நடத்தப்படுவதை சுட்டிக் காட்டி மனுதாரர் விண்ணப்பம் செய்ததை நீதிமன்றம் ஏற்கவில்லை.
18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் தமது மதத்தைத் தேர்வு செய்யக்கூடாதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இத்தகைய மனுவை தாக்கல் செய்ததற்காக கடுமையான அபராதம் விதிக்க நேரிடும் என்று மனுதாரரை நீதிபதிகள் எச்சரித்தனர்.மத வழிபாடு என்பது தனிநபரின் அடிப்படை உரிமையாகும் என்று உச்சநீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்துள்ளது
Comments