எகிப்தில் 3000 ஆண்டுகளுக்கு முன் மணலில் புதைந்த தங்க நகரம் கண்டுபிடிப்பு
எகிப்தில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மணலில் புதைந்து போன தங்க நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லக்ஸார் என்ற இடத்தில் பாலைவனத்தில் தொல்பொருள் ஆய்வுத் துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது சிறிய அளவிலான சுவர் தென்பட்டதைத் தொடர்ந்து அதனை ஆய்வு செய்தபோது 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன தங்க நகரம் என்பது தெரியவந்தது.
எகிப்து வரலாற்றிலேயே மிக முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படும் டுட்டகாமன் கல்லறையைத் தொடர்ந்து தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க நகரம் மிக முக்கியமானது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மணலில் புதைந்திருந்த இந்த நகரத்தில் தங்க நகைகள், வண்ணமயமான மட்பாண்ட பொருட்கள், தாயத்துக்கள், அரச முத்திரைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Comments