கிழக்கு லடாக் எல்லையில் படைக்குறைப்பை முழுமையாக நிறைவேற்ற சீனாவுக்கு இந்தியா வலியுறுத்தல்
இந்தியா சீனா ராணுவ தளபதிகள் மட்டத்திலான 11 வது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், மோதல் போக்கு அதிகரித்ததை அடுத்து, இருநாடுகளும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களையும், ஆயுதங்களையும் எல்லையில் குவித்தன.ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பல சுற்று பேச்சுக்கு பின், சுமுக தீர்வு எட்டப்பட்டது.
இரு தரப்பும், படைகளை திரும்பப் பெற ஒப்புக் கொண்டனர். கடந்த பிப்ரவரி மாதம் முதல், வடக்கு மற்றும் தெற்கு பாங்காங் சோ ஏரிக்கரை பகுதியில் குவிக்கப்பட்ட படையினரை, இரு தரப்பினரும் திரும்பப் பெற்றனர். எஞ்சிய பகுதிகளான கோக்ரா ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை விலக்கிக் கொள்ளவும் தேப்சங் பகுதியில் இந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணிகளை மீண்டும் மேற்கொள்ளவும் இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டது.
படைநீக்கம் நடவடிக்கையை முழுமையாக நிறைவேற்றும்படி இந்தியா சீனாவை வலியுறுத்தியுள்ளது.
Comments