நாக்பூரில் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு

0 1613

நாக்பூரில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து நேரிட்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஏராளமானோர் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இதில் சிலரின் நிலைமை கவலையளிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வில் ட்ரிட் மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் 27 பேர் உடனடியாக மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

பல மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் சில தீயணைப்பு வீரர்கள் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments