தமிழக கடல் எல்லைகளில் ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது மீன்பிடித் தடைக்காலம்
தமிழக கடல் எல்லைகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்தை பெருக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வரும் 15ந் தேதி முதல் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள மீன்பிடி விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலமாக மீன்பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது.பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடி தடை காலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீன்தடை காலத்தில் பல ஆயிரக்கணக்கான விசைப்படகுகள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தப்படும்.
Comments