கொரோனாவை தடுக்க இரவுநேர ஊரடங்கு... தமிழக அரசு எச்சரிக்கை!

0 8907

கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து, தமிழக அரசு அறிவித்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. கட்டுப்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று விகிதம் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி வரை தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த இரு வாரங்களாக கொரோனா மீண்டும் அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, கோவில் திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதுடன், வழிபாட்டு தலங்கள் இரவு 8 மணி வரை மட்டும் திறந்திருக்கும். பேருந்துப் பயணம், கடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், திரையரங்குகள், படப்பிடிப்புகள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு ஆகியவற்றுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு இ-பதிவு முறை கட்டாயமாகும்.

 இதுதவிர, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த மாநிலம் தழுவிய அளிவல் காய்ச்சல் முகாம்கள், நடமாடும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நோய் தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிவதுடன், நோய் தொற்று பகுதியில் கடும் தடுப்பு நடவடிக்கை எடுக்க மாவட்டங்கள் தோறும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

வருகிற 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பலன் கிடைக்காவிட்டால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments