மாமல்லபுரத்தில் கட்டப்பட்டுள்ள ரேடிசன் புளூ ஓட்டலை இடிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

0 8326

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள ரேடிசன் ப்ளூ ரிசார்ட்டின் கட்டிடங்களை இடிக்க, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலோர மண்டல ஒழுங்குமுறை விதிகளின்படி அனுமதி பெறாமல்,  கட்டப்பட்ட கட்டிடங்களை  2 மாதங்களுக்குள் அந்நிறுவனமே இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

10 கோடி ரூபாய் அபராதத்தை, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கடற்கரையிலிருந்து 200-500 மீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களை வரைமுறைப்படுத்த மத்திய அரசை அணுக ரிசார்ட் நிர்வாகத்துக்கு தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments