உர விலையை உயர்த்தக் கூடாது - உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
உர விலையை உயர்த்தக் கூடாது என்றும் பழைய விலையிலேயே விற்க வேண்டும் என்றும் உர உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
உழவர் உரக் கூட்டுறவு நிறுவனமான இப்கோவும், தனியார் நிறுவனங்களும் யூரியா அல்லாத, டிஏபி, பொட்டாஷ், என்பிகே உரங்களின் விலையை 50 விழுக்காடு வரை உயர்த்தின. இது குறித்து டெல்லியில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அதில் உர விலையை உயர்த்தாமல் பழைய விலைக்கே விற்க வேண்டும் என நிறுவனங்களிடம் அரசு கேட்டுக்கொண்டது. அரசின் வேண்டுகோளை உர நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டதாக வேதிப்பொருட்கள் மற்றும் உரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
Comments